Breaking News
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 37 டிகிரியும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

மேலும் வரும் 26-ம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லார், வால்பாறை, நடுவட்டம் உள்ளிட்ட இடங்களில் 2 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.