Breaking News
டுவிட்டரில் டிரண்டான திமுக தலைவர் ஸ்டாலின்

திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சென்னையில் இன்று நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் அன்பழகனால் வெளியிடபட்டது.

அதனையடுத்து, திமுகவின் 2-வது தலைவரான மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் #DMKThalaivarStalin என்ற ஹேஸ்டேக் பயன்படுத்தி இணையதளவாசிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த ஹேஸ்டேக் டுவிட்டர் இந்திய ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.