Breaking News
ஒரே நாளில் மோதிக்கொள்ளும் சமந்தா – நாக சைதன்யா படங்கள்

சமந்தா, நாக சைதன்யா நடித்த படங்கள் ஒரே நாளில் ரிலீஸாக இருக்கின்றன.
சமந்தா நடிப்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 13-ம் தேதி ‘சீமராஜா’ மற்றும் ‘யு டர்ன்’ என இரண்டு படங்கள் ரிலீஸாகின்றன. சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்துள்ள ‘சீமராஜா’ படத்தை பொன் ராம் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.
‘யு டர்ன்’ படத்தை, பவன் குமார் இயக்கியுள்ளார். கன்னடத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வெளியான படம் இது. கன்னடத்தில் இயக்கிய பவன் குமாரே தமிழ் மற்றும் தெலுங்கிலும் இயக்கியுள்ளார். இரண்டு மொழிகளிலுமே சமந்தா பிரதான வேடத்தில் நடித்துள்ளார்.

தமிழைப் போலவே தெலுங்கிலும் செப்டம்பர் 13-ம் தேதி ‘யு டர்ன்’ படம் ரிலீஸாகிறது. அதே தேதியில் நாக சைதன்யா நடித்த ‘சைலஜா ரெட்டி அல்லுடு’ தெலுங்குப் படமும் ரிலீஸாகிறது. மாருதி தசரி இயக்கியுள்ள இந்தப் படத்தில், அனு இம்மானுவேல், ரம்யா கிருஷ்ணன், வெண்ணிலா கிஷோர் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படி ஒரே நாளில் கணவன் – மனைவி நடித்த படங்கள் மோதிக்கொள்ள இருப்பதால், தெலுங்கு சினிமா வட்டாரங்கள் சுவாரசியத்துடன் காத்திருக்கின்றன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.