காஷ்மீரில் 360 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
கடந்த 2 ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீரில் 360 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று சிஆர்பிஎப் தலைவர் ராஜீவ் ராய் பட்னாகர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
தவறாக வழிநடத்தப்படும் காஷ்மீர் இளைஞர்கள் தீவிரவாத அமைப்புகளில் இணைகின்றனர். இதை தடுக்க பாதுகாப்புப் படை சார்பில் இளைஞர்களிடம் விழிப் புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
தீவிரவாதிகளின் வாழ்நாள் மிகவும் குறைவு. அவர்களுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் உடனடியாக நடவடிக்கை எடுப்ப தில்லை. இளம் வயது தீவிர வாதிகளை சரண் அடையுமாறு கோருகிறோம். அவர்கள் தீவிரவாத பாதையில் தொடரும்போதுதான் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த ஆண்டு 220-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப் பட்டனர். இந்த ஆண்டு இதுவரை 142 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள னர். இதன்படி கடந்த 2 ஆண்டு களில் மட்டும் 360-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர். குறிப்பாக தீவிர வாத அமைப்புகளின் தலைவர் கள் பலர் உயிரிழந்துள்ளனர்.
காஷ்மீர் முழுவதும் சிஆர்பிஎப் படையைச் சேர்ந்த 60 பட்டாலியன் களைச் சேர்ந்த 60 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாநில போலீஸார், ராணுவத்துடன் இணைந்து சிஆர்பிஎப் வீரர்கள் செயல்படுகின்றனர்.
மற்ற மாநிலங்களைப் போன்று காஷ்மீரில் சட்டம், ஒழுங்கை பராமரிப்பது கடினம். இங்கு கொரில்லா முறையில் தீவிர வாதிகள் சண்டையிடுகின்றனர். திடீரென தாக்கிவிட்டு தப்பியோடி விடுகின்றனர்.
சிஆர்பிஎப் வீரர்களின் பாதுகாப் புக்காக அதிநவீன கவச உடைகள், ஆயுதங்கள், வாகனங்கள் வழங் கப்பட்டுள்ளன. கல்வீச்சு தாக்குதல் களின்போது சிஆர்பிஎப் வீரர்கள் பலர் படுகாயம் அடைகின்றனர். எனினும் பொதுமக்களின் உயிரிழப் பைத் தடுப்பதற்காக வீரர்கள் மிகுந்த பொறுமை காக்கின்றனர்.
தீவிரவாதத்தை தடுக்க ராணுவ ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனினும் நல்ல அரசு நிர்வாகம், பொருளாதார வளர்ச்சி மூலம் இளைஞர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தினால் தீவிரவாதம் குறையும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.