Breaking News
நீதிமன்ற உத்தரவின்படியே சிறையில் கைதிகளுக்கு சிறப்பு வசதிகள்: சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தகவல்

நீதிமன்ற உத்தரவின்படியே உட்பட்டே சிறையில் கைதிகளுக்கு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன என்று சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

ராமசாமி படையாட்சியாரின் 101-வது பிறந்த நாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படத்துக்கு முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் நேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதன்பிறகு சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கு நிலுவையில் இருந்தது. ஜெயலலிதா முதல்வராக இருந்த போது பேரறிவாளன் உட்பட 7 பேரையும் குற்றவியல் நடைமுறை சட்டப்படி விடுதலை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார். அப்போது, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதற்கு தடை பெற்றது.

அந்த வழக்கில், மத்திய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தர விட்டதால், சட்டப்பேரவையில் ஜெயலலிதா கொண்டு வந்த தீர் மானம் நடைமுறைப்படுத்தப்படா மல் நிலுவையில் இருந்தது.

இந்த வழக்கு விசாரணையின் போது பேரறிவாளன் தரப்பு வழக் கறிஞர் ஆஜராகி, “அரசியலமைப்பு சட்டப்பிரிவு 161-ன் கீழ் தமிழக அரசு தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று பேரறிவாளன் தரப்பில் தமிழக ஆளுநரிடம் அளித்த கோரிக்கை மனு இன்னமும் நிலுவையில் இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் ஆளுநர் முடிவு எடுக்க முடியாத சூழல் இருக்கிறது. எனவே, இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளி வான உத்தரவு பிறப்பிக்க வேண் டும்” என்று கேட்டுக்கொண்டார்.

அதையடுத்து, ‘‘இந்த விஷயத் தில் ஆளுநருக்கு எந்தத் தடையும் இல்லை. ஆளுநரே முடிவெடுக் கலாம்’’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதையடுத்து 48 மணி நேரத்துக்குள்ளாகவே விடுமுறை நாள் என்றும் பாராமல் தமிழக அமைச்சரவை கூடி, பேரறிவாளன் உட்பட 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

அதுதொடர்பான அனைத்து ஆவணங்களும் கடந்த 14-ம் தேதி ஆளுநருக்கு அனுப்பப்பட்டன. சட்டத்துக்கு உட்பட்டு உச்ச நீதி மன்ற உத்தரவின் பேரில் ஆளுநர் விரைவிலேயே முடிவெடுப்பார். இவ்வளவு காலத்துக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று சட்டத்தில் எதுவும் சொல்லப்பட வில்லை. ஆனால், ஒரு குறிப் பிட்ட காலத்துக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று நாம் அனைவரும் எதிர்பார்க்கிறோம். தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, முதல்வர் ஜெயலலி தாவின் எண்ணங்களை நிறைவேற் றும் வகையில் ஆளுநர் முடிவு இருக்கும் என்று நம்புகிறோம்.

புழல் சிறையில் சொகுசு வாழ்க்கை, நட்சத்திர விடுதி போன்ற வசதி வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுப்பதாக செய்தி வெளிவந் துள்ளன. அந்த புகைப்படத்தில் இருக்கும் சிறைக் கைதி, போதை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டவர். அவர் 5 ஆண்டுகளாகச் சிறையில் இருந்து வருகிறார். நீதிமன்ற உத்தரவின்படி அவருக்கு முதல் வகுப்பு பிரிவு ஒதுக்கப்பட்டிருக்கிறது. சிறை விதிகளின்படி முதல் வகுப்பில் வழங்கப்பட வேண்டிய வசதிகள்தான் அவருக்கு அளிக்கப் பட்டுள்ளன. அவர் சிறை ஆடை அணியவில்லை என்றும் செய்தியில் சொல்லப்பட்டுள்ளது.

காலை 7.30 முதல் மாலை வரை சிறை வேலைகளை செய்யும்போது மட்டும்தான் சிறை ஆடையை அணிய வேண்டும். மற்ற நேரங்களில் முதல் வகுப்பு கைதிகள் தாங்கள் வைத்திருக்கும் ஆடைகளை அணியலாம் என சிறை விதி 228-ல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் புதிய ஆடை வாங்கிக் கொள்ளலாம். உணவும் தயாரிக்கலாம் என்றும் விதிகளில் கூறப்பட்டுள்ளது. முதல் வகுப்பு கைதிகள், அவர்களே தொலைக்காட்சி வாங்கி வைத்துக் கொள்ளலாம். புழல் சிறையில் உள்ள 24 பிளாக்குகளில் 20 பிளாக்குகளில் முதல் வகுப்பு கைதிகள் உள்ளனர்.

கைதிகள் தங்கள் குடும்பத்தினர், உறவினர்களிடம் பேசுவதற்கு சிறை நிர்வாகமே தொலைபேசி வசதி செய்து கொடுத்திருக்கிறது. சிறை நிர்வாகத்தில் உள்ள சிலரின் தவறான நடவடிக்கை காரணமாக சிறைக்குள் செல் போன்கள் வந்துவிடுகின்றன. அதைத் தடுக்க சிறை நிர்வாகம் கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. செல்போன்கள் அதிக எண்ணிக்கையில் கைப்பற் றப்பட்டுள்ளன. சிறை அறைக் குள் தொலைக்காட்சி இருப்பதால் தான் செல்போனில் சார்ஜ் போடு கின்றனர்.

அதனால், தொலைக்காட்சி பெட்டிகளை சிறை அறைகளுக்கு வெளியே வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனிமேல் ஒரு செல்போன் கூட சிறைக்குள் போகாத அளவுக்கு கடும் நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட கைதிகள் அனை வரும் பல்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.காலை 7.30 முதல் மாலை வரை சிறை வேலைகளை செய்யும்போது மட்டும்தான் சிறை ஆடையை அணிய வேண்டும். மற்ற நேரங்களில் முதல் வகுப்பு கைதிகள் தாங்கள் வைத்திருக்கும் ஆடைகளை அணியலாம் என சிறை விதி 228-ல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.