விஜய் மல்லையா மீது சிபிஐ விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல்: வங்கி அதிகாரிகள் பெயர்களும் இடம்பெறும்?
இங்கிலாந்துக்கு தப்பி ஓடிய தொழி லதிபர் விஜய் மல்லையா மீது சிபிஐ குற்றப் பத்திரிகையை விரை வில் தாக்கல் செய்ய உள்ளது. ஒரு மாதத்துக்குள் குற்றப் பத்திரிகை தாக்கலாகும் என்று தெரிகிறது.
விஜய் மல்லையா மீது சிபிஐ தாக்கல் செய்யும் முதலாவது குற்றப் பத்திரிகை இதுவாகும். எஸ்பிஐ தலைமையிலான 17 வங்கிகளிடமிருந்து ரூ. 6 ஆயிரம் கோடி கடன் பெற்று அதை திரும்ப செலுத்தாதது தொடர்பாக இந்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப் படுகிறது. இதில் எஸ்பிஐ மட்டும் ரூ. 1,600 கோடி கடன் வழங்கி யுள்ளது.
கடந்த ஆண்டு ஏற்கெனவே சிபிஐ ஒரு வழக்கு பதிவு செய்துள்ளது. ஐடிபிஐ வங்கியில் ரூ. 900 கோடி கடன் பெற்றது தொடர்பாக அப்போது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் வங்கியின் மூத்த அதிகாரிகளுக்கும் தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இதுவரையில் மல்லையா மீது 2 வகையான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2015-ம் ஆண் டில் ஐடிபிஐ மட்டுமே ரூ. 900 கோடி கடன் வழங்கியுள்ளது. இதில் மூத்தஅதிகாரிகளுக்கு தொடர் பிருப்பது சிபிஐ விசாரணையில் தெரியவந்தது.
2016-ம் ஆண்டில் வங்கிகளின் கூட்டமைப்பு கடன் வழங்கியது தொடர்பான ஒரு வழக்கையும் சிபிஐ பதிவு செய்தது.
வங்கிகளின் கூட்டமைப்பு கடன் வழங்கியது தொடர்பான விசா ரணை முழுமை அடைந்து விட்ட தாகவும், இதில் சம்பந்தப்பட் டுள்ள அதிகாரிகளின் பெயர்களை இப்போது வெளியிட முடியாது என்றும் சிபிஐ அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.
எஸ்பிஐ-யைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மற்றும் இப்போது பணி யில் இருக்கும் அதிகாரிகள் சிலரது பெயரும் குற்றப் பத்திரிகையில் இடம்பெறும் என்று தெரிகிறது. இவர்கள் தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்கு போதுமான சான்றுகளை சிபிஐ திரட்டியதன் அடிப்படையில் அவர் களது பெயர்களை பட்டியலில் சேர்த்துள்ளதாகத் தெரிகிறது.
கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸின் நிறு வனர் விஜய் மல்லையா மற்றும் தலைமை நிதி அதிகாரி (சிஎப்ஓ) ஏ. ரகுநாதன் மற்றும் சில மூத்த முன்னாள் அதிகாரிகள் பெயர்கள் குற்றப் பத்திரிகையில் இடம்பெறுவ தாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித் தனர்.
வங்கி அதிகாரிகளுக்கு நெருக்கு தல் கொடுத்த நிதி அமைச்சக அதி காரிகள் யார் என்பது குறித்தும் சிபிஐ விசாரணை நடத்தியது. இருப் பினும் கடன் வழங்கியதில் அவர் களுக்குள்ள பங்கு குறித்து இன் னமும் மதிப்பீடு செய்யப்பட வில்லை.
விசாரணையின்போது விஜய் மல்லையா, கடனாக பெற்ற தொகையை வேறு பணிகளுக்கு பயன்படுத்தியது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
2005-ம் ஆண்டிலிருந்து 2010-ம் ஆண்டு வரையான காலத்தில் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத் துக்கு பல்வேறு சலுகைகளை வங்கி அதிகாரிகள் அளித்துள்ளதற்கான ஆதாரத்தையும் சிபிஐ சேகரித் துள்ளது.
2009-2010-ம் நிதி ஆண்டில் வங்கிக்கு செலுத்துவதாக ஒப்புக் கொண்ட தொகையை செலுத்தத் தவறியது.இதனால் கடன் அளித்த வங்கிகள் இதை வாராக் கடனாக அறிவித்து, அந்தக் கணக்கில் சேர்த்துள்ளது. கடன் பெற்ற வங்கி களில் கிங்ஃபிஷர் நிறுவனம் கணக்கு எதையும் குறித்த இடை வெளியில் செயல் படுத்தவில்லை என்றும் சிபிஐ தனது குற்றப் பத்தி ரிகையில் சுட்டிக்காட்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்தே வங்கிகள் யுபி ஹெச்எல் நிறுவனத்துக்கு அளித்த கடன் உத்தரவாத வசதிகள் மற்றும் விஜய் மல்லையா அளித்த தனி நபர் உத்தரவாதத்தையும் திரும்பப் பெற்றதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
பணத்தை திரும்ப செலுத்தும் சக்தியிருந்தும் வேண்டுமென்றே விஜய் மல்லையா கடனை திரும்ப செலுத்தவில்லை. குழும நிறுனங்கள் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் திட்டம் போட்டு வங்கிகளை ஏமாற்றியதாக சிபிஐ குறிப்பிட்டுள்ளது.
எஸ்பிஐ தவிர பஞ்சாப் நேஷ னல் வங்கி, ஐடிபிஐ வங்கி (தலா ரூ. 800 கோடி), பாங்க் ஆப் இந்தியா ரூ. 650 கோடி, பாங்க் ஆப் பரோடா (ரூ. 550 கோடி), சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா (ரூ. 410 கோடி) ஆகியவையும் கடன் வழங்கியுள்ளன.