Breaking News
தல அஜித் எனக்கு கற்றுக் கொடுத்தார்- பாலிவுட் நடிகர் புகழாரம்

தல அஜித் நடிக்கும் விசுவாசம் படத்தின் இறுதிகட்ட சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது .

இந்த படத்தில் அஜீத்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார் . தம்பி ராமையா, ரோபோ சங்கர், விவேக் ரமேஷ் திலக், யோகி பாபு , போஸ் வெங்கட், கோவை சரளா, ஜாங்கிரி மதுமிதா உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர் .

பாலிவுட் நடிகர் ரவி அவனா விசுவாசம் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து அவர் கூறுகையில், தல அஜித் உடன் தான் என்னுடைய முதல் தமிழ் படத்தின் ஷூட்டிங் நடந்துள்ளது . அவருடன் இணைந்து நடித்தது சிறந்த அனுபவம். மிகச்சிறந்த நல்ல மனிதரான அஜித்திடம் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ளலாம்’ என்றார்.

விசுவாசம் படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது இந்த படத்தில் அஜித் இரண்டு வேடத்தில் நடித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.