Breaking News
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் பிரச்சினை: துபாயில் ஐசிசி குழு விசாரணை

2008 ஆம் மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மட்டும் இணைந்து முழு தொடரில் விளையாடவில்லை. இருந்தாலும் மற்ற சர்வதேச தொடர்களில் இரு அணிகளும் பங்கேற்று விளையாடி வருகிறது.
இரு அணிகளும் 24 போட்டிகளில் விளையாட புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருந்தது. இந்தப் போட்டிகள் நடத்தப்படாததால் பாகிஸ்தான் அணிக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் மீறிவிட்டதாகவும் இதன் காரணமாக 70 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 500 கோடி ரூபாய்) இழப்பீடாக வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. பின்னர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிலும் புகார் செய்தது.

இந்நிலையில் இந்தப் பிரச்சினை பற்றி பேசி முடிவெடுக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (Dispute Resolutions Committee) தகராறுகள் தீர்ப்பாயம் முடிவு செய்தது. அதன்படி அதன் தலைவர், மைக்கேல் பிளாஃப் தலைமையில் ஜேன் பால்சன், அன்னபெல் பென்னட் ஆகியோரை கொண்ட குழு துபாயில் நேற்று விசாரணையை தொடங்கியுள்ளது.

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்புத் தொடரின்போது கிரிக்கெட் ஒப்பந்தம் தொடர்பாக ஐ.சி.சி.யின் சர்ச்சை தீர்வுகள் குழுவிற்கு முன்பு முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேத்தி ஆஜரானார்.

எனினும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட அரசு அனுமதிக்காத வரை இந்த ஒப்பந்தத்தை சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்த முடியாது என்று கூறியுள்ளது.இந்த விசாரணை நாளை வரை நீடிக்கிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு சார்பாக நஜம் ஆஜரானார். ரத்னகர் ஷெட்டி, பி.சி.சி.ஐ. சார்பில் ஆஜரானார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.