Breaking News
நரம்பியல் பிறவி குறைபாடுகளுடன் குழந்தை பிறப்பதைத் தடுக்க அதிக வயது வித்தியாச திருமணத்தை தவிர்க்க வேண்டும்: சென்னை அரசு பொது மருத்துவமனை டாக்டர் வலியுறுத்தல் 

நரம்பியல் பிறவிக் குறைபாடு களுடன் குழந்தை பிறப்பதைத் தடுக்க அதிக வயது வித்தியா சத்தில் திருமணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை இயக்குநர் டாக்டர் ஆ.திருவள்ளுவன் தெரிவித்தார்.

சென்னை அரசு பொது மருத் துவமனையில் பொதுமக்கள் – டாக் டர்கள் இடையே சுமுக உறவை மேம்படுத்துவது தொடர்பான கலந் துரையாடல் நிகழ்ச்சி, நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை இயக்கு நர் டாக்டர் ஆ.திருவள்ளுவன் தலைமையில் நேற்று நடந்தது. நரம்பியல் பிறவிக் குறைபாடுகள் குறித்த பொதுமக்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு துறையின் டாக்டர்கள் விளக்கமாக பதில் அளித்தனர்.

நரம்பியல் பிறவிக் குறைபாடு கள் குறித்து நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை இயக்குநர் டாக் டர் ஆ.திருவள்ளுவன் கூறிய தாவது:

நரம்பு மண்டலம் மூளை, தண்டு வடம் உள்ளிட்ட புற நரம்புகளை உள்ளடக்கியது. பெண், தான் கர்ப்பமாக இருப்பதைத் தெரிந்து கொள்ளும் 3-வது மாதத்துக்கு முன்பே குழந்தையின் நரம்பு மண்டல வளர்ச்சி ஆரம்பமாகி விடு கிறது. சொந்தத்தில் திருமணம், 30 வயதுக்கு மேல் தாய்மை அடைதல், கர்ப்பக் காலத்தில் வலிப்பு மருந்துகளை உட்கொள்ளுதல், சத்து குறைபாடு, கதிர்வீச்சு, சுற்றுச்சூழல் போன்றவற்றால் நரம்பியல் குறைபாடுடன் குழந்தை பிறக்க அதிகம் வாய்ப்புள்ளது.

சில நரம்பியல் குறைபாடுடன் பிறக்கும் குழந்தைகளை மட்டுமே அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்த முடியும். பிறக்கும் 1,000 குழந்தைகளில் 3 குழந் தைகள் நரம்பியல் பிறவிக் குறைபாடுகளுடன் பிறக்கிறது.

நரம்பியல் குறைபாடுடன் குழந்தை பிறப்பதைத் தவிர்க்க சொந்தத்தில் திருமணம் செய்துக் கொள்ளக்கூடாது. கர்ப்பம் அடைந் தவுடன் டாக்டரின் ஆலோசனை யின்படி அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்ய வேண்டும். வயது முதிர்ந்த தாய்மைப்பேற்றைத் தவிர்க்க வேண்டும். அதேபோல் அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்யக்கூடாது.

முக்கியமாக சத்து மாத்திரை (Folic Acid) உட்கொள்ள வேண்டும். இந்த மாத்திரை அரசு மருத்துவ மனைகளில் இலவசமாக வழங்கப் படுகிறது. மருத்துக்கடைகளிலும் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கிறது. கர்ப்பக்காலத்தில் டாக்டரின் ஆலோசனைப்படியே வலிப்பு மாத்திரை, மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ஆ.திருவள்ளுவன் தெரிவித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.