Breaking News
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் பிறந்தநாள் ரஜினிகாந்த், ப.சிதம்பரம் வாழ்த்து

தமிழக காங்கிரஸ் கட்சியின் தென்சென்னை மாவட்ட தலைவர் கராத்தே ஆர்.தியாகராஜனுக்கு நேற்று பிறந்தநாள் ஆகும். சென்னை அடையாறில் உள்ள தனது இல்லத்தில் ‘கேக்’ வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்.

அவருக்கு நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் ஆகியோர் தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மைய அறக்கட்டளை தலைவரும், பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான சைதை துரைசாமி, திருவாடுதுறை தி.மு.க. எம்.எல்.ஏ. ஆடல் அரசன், கார்த்தி சிதம்பரம், முன்னாள் எம்.பி.க்கள் பீட்டர் அல்போன்ஸ், ஜே.எம்.ஆரூண் உள்ளிட்டோரும் தொலைபேசி வாயிலாக கராத்தே தியாகராஜனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினர்.

ரத்ததான முகாம்

மலேசியா நாட்டு முன்னாள் இணை மந்திரி டத்தோ சரவணன், டத்தோ மோகன் எம்.பி., தி.மு.க. வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, தொழில் அதிபர் பழனி ஜி பெரியசாமி உள்பட முக்கிய பிரமுகர்களும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் கராத்தே தியாகராஜனை நேரில் வாழ்த்தினர்.

கராத்தே தியாகராஜன் பிறந்தநாளையொட்டி தென்சென்னை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும், 5 ஆயிரம் பேருக்கு பிரியாணி விருந்தும் அவரது இல்லத்தில் வழங்கப்பட்டது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.