Breaking News
ரூ.127 கோடி மதிப்பிலான, 471 புதிய பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

2 ஆயிரம் புதிய பஸ்களை வாங்க அரசு ஆணையிட்டு இருந்தது. அதன்படி, புதிய கூண்டுகள் கட்டி தயாராக உள்ள முதல் சிற்றுந்து மற்றும் சாதாரண பேருந்து ஆகியவற்றை கடந்த மே மாதம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். இதில் பல்வேறு நவீன வசதிகள் உள்ளன. 2 ஆயிரம் பஸ்களும் இந்த வடிவமைப்பில் இருக்கும்.
போக்குவரத்தை நவீனமயமாக்கும் முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது. படுக்கை வசதி, ஏ.சி. வசதி, கழிவறை, மிதவை போன்ற வசதிகள் உள்ளன தனியாருக்கு போட்டியாக அவை அமையும்.

இன்று சென்னை தலைமை செயலகத்தில், ரூ.127 கோடி மதிப்பிலான, 471 புதிய பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி.

பேருந்து சேவையை தொடங்கி வைத்து புதிய பேருந்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் பயணம் செய்தனர். புதிய பேருந்துகளில் படுக்கை, குளிர்சாதன மற்றும் கழிப்பிட வசதிகள் உள்ளது.

இந்த பஸ்களில் சிறப்பு அம்சங்கள் என்னவென்றால், தரமான வேகக்கட்டுப்பாட்டுக் கருவி, ஜி.பி.எஸ். வசதி, செல்போன் செயலி மூலம் பஸ் வரும் நேரத்தை அறியும் வசதி, 2 அவசர கால வழிகள், சீட் சாய்வை 105 டிகிரியில் இருந்து 115 ஆக உயர்த்தியிருப்பது போன்றவை உள்ளன.

ஜி.பி.எஸ். வசதி இருப்பதால் இலவச வைபை தொழில்நுட்பத்தையும் எதிர்காலத்தில் கொண்டு வரமுடியும். அடுத்த பஸ் நிறுத்தத்தை பஸ்சில் தெரிவிக்கும் வசதியையும் கொண்டுவர வழிவகை ஏற்பட்டுள்ளது.

குடிபோதையில் டிரைவர் இருப்பதை கண்டறியும் கருவி, அவரது இருக்கைக்கு அருகே வைக்கப்பட்டுள்ளது. இதை மாதிரியாக பொருத்தி இருக்கிறோம். இன்னும் பல வசதிகள் கொண்டுவரப்படும்.

நிதி நெருக்கடி இருந்தாலும் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்துதர வேண்டியது அரசின் கடமை. அடமானத்தில் உள்ள சொத்துகளை மீட்கும் நடவடிக்கை படிப்படியாக செய்யப்பட்டு வருகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.