பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது
கிம்பே நகரில் இருந்து 125 கி.மீ. கிழக்கில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
நிலநடுக்கத்துக்கு முன்பாகவும், பின்பாகவும் 2 முறை நில அதிர்வுகளும் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து பப்புவா நியூ கினியா மற்றும் சாலமன் தீவுகளில் சுனாமி அலைகள் எழும் என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரித்தது.
நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தாலும் சுனாமியாலும் பாதிப்புகள் ஏற்பட்டனவா என்பது குறித்து தகவல் இல்லை.
கடந்த பிப்ரவரி மாதம் 7.5 புள்ளி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு, 125 பேர் பலியாகி, அதனால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மக்கள் முழுமையாக மீளாத நிலையில் பப்புவா நியூ கினியாவில் நேற்றும் நிலநடுக்கம் தாக்கி இருப்பது மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது.