Breaking News
நிலவில் மனிதன் கால் வைத்தது உண்மை இல்லை என கூறும் மற்றொரு வீடியோ வெளியானது

1969ஆம் ஆண்டு அப்பல்லோ நிலவில் இறங்கியதிலிருந்தே பலரும் நிலவில் மனிதன் கால் வைத்ததாகக் காட்டப்படும் வீடியோ போலியானது, நாசா ஏமாற்றுகிறது என்று விமர்சித்து வந்தார்கள்.

சமீபத்தில் நிலவில் கால் வைத்த விண்வெளி வீரர்களின் ஹெல்மெட்டின் கண்ணாடியில் பலரது உருவங்கள் தெரியும் வீடியோ ஒன்று வெளியானது.
இந்நிலையில் 1966க்கும் 72க்கும் இடையே படம் பிடிக்கப்பட்டதாகக் கருதப்படும் இன்னொரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் நிலவின் பரப்பு போன்று காணப்படும் ஒரு இடத்தில் படம் எடுப்பவர்கள் தங்கள் கேமராக்களை தயாராக வைப்பது தெரிகிறது.

ஒரு விண்வெளி வீரர் அமெரிக்க கொடியை நடும்போது இயக்குநர் ஒருவர் ரெடி, ஆக்‌ஷன் என்று கூறும் குரலும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இன்னொரு காட்சியில் அப்பல்லோ விண்கலம் போல் காணப்படும் ஒரு பொருளைச் சுற்றி படப்பிடிப்புக் குழுவினர் நிற்பது தெரிகிறது.

ஆம்ஸ்ட்ராங், பஸ் ஆல்ட்ரின் மற்றும் மைக்கேல் காலின்ஸ் மூவரும் விண்கலத்தை நோக்கி செல்லும்போதும் ரெடி, ஆக்‌ஷன் என்று கூறும் குரல் ஒலிக்கிறது.

அப்படியென்றால் மனிதன் உண்மையில் நிலவில் கால் வைத்தானா இல்லையா, இந்த வீடியோவில் காட்டப்படும் காட்சிகள் உண்மை என்றால் இதுவரை நாசா நம்மை ஏமாற்றித்தான் வந்ததா என்று கேள்வி எழுப்புகிறார்கள் இந்த வீடியோவைப் பார்த்தவர்கள்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.