மதுரை மாவட்டம் குருவித்துறையில் உள்ள பெருமாள் கோவிலில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான நான்கு சிலைகள் கொள்ளை
மதுரை மாவட்டம் குருவித்துறையில் உள்ள பெருமாள் கோவிலில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான நான்கு சிலைகள் கொள்ளை போயுள்ளன. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறையில் சித்திர ரத வல்லப பெருமாள் கோவில் உள்ளது. அண்மையில் நடந்த குருபெயர்ச்சி வழிபாடு இங்கு சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில், கோவில் அரச்சகர் ரகு என்பவர் வழக்கம் போல், இன்று காலை கோவில் நடைதிறக்க சென்றார். அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரகு, உடனே போலீசாருக்கு தகவல் அளித்தார்.தகவலறிந்து கோவிலுக்கு விரைந்து வந்து போலீசார் நடத்திய விசாரணையில், கோவிலில் இருந்து ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீனிவாப் பெருமாள் ஐம்பொன் சிலைகள் கொள்ளை ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது. பின்னர், கோவிலில் பொருத்தப்பட்ட சிசிடிவி காமிராவை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அந்த வீடியோ காட்சிகளில், அடையாளம் தெரியாத இரண்டு பேர், அதிகாலை சுமார் 3 மணிக்கு கோவில் சிலைகளை திருடிச் சென்றது பதிவானது. அவர்களின் நடவடிக்கைகள் வடமாநிலத்தவர்கள் போல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்கள் யார், எங்கு சென்றார்கள் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.