Breaking News
பாலியல் துன்புறுத்தல் என்பது திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது -கமல்ஹாசன்

சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாலியல் துன்புறுத்தல் என்பது திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது. நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம். அவர் அரசியலுக்கு வருவது அவரது உரிமை. அதை தடுக்க முடியாது.

சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேவர் மகன்-2 திரைப்படத்தில் சாதி ஒழிப்பு தொடர்பான கருத்துகள் கண்டிப்பாக இருக்கும். தேவர் மகன்- 2 அனைத்து சாதியினருக்கும் எதிரான படம். ஒரேயொரு சாதியை எதிர்க்கும் படம் கிடையாது. சாதி வேண்டாம் என்ற நோக்கத்தில்தான் இந்த படம் எடுக்கப்படுகிறது.

எனக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உரையாடலை யாரும் தடுக்க முடியாது. என்னை தமிழக அரசியல்வாதிகள் கவனித்து வருகிறார்கள். அமைச்சர்களின் பேட்டியை பார்த்தாலே தெரியும் உங்களுக்கு.

பாலியல் குற்றச்சாட்டுகளை ஆராய வேண்டும். பாலியல் குற்றங்கள் எல்லா துறையிலும் உள்ளது. புகார்கள் வந்தால் அதன்மீது நடவடிக்கை எடுப்பதுதான் சரியானது, இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.