” நாட்டை காப்பாற்ற, மோடியை நீக்கு” என்ற வாசகம் வெளியாகியுள்ளது.
புதுடில்லி: காங்.தனது பேஸ்புக் கணக்கு மூலம் பிரதமர் மோடியை பதவி நீக்க வேண்டும் என பாகிஸ்தானில் விளம்பரம் செய்துள்ளது என பா.ஜ. ஆதாரத்துடன் குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக பா.ஜ. தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா தனது டுவிட்டரில் புகைப்படத்துடன் பதிவேற்றம் செய்திருப்பதாவது:
பா.ஜ. செய்தி தொடர்பாளர் சமித் பத்ரா , காங். முகநூல் பக்கத்தின் பிரதியை ஆதாரத்துடன் என்னிடம் அளித்தார். அதில் காங். தனது முகநூல் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக விளம்பரம் ஒன்றை பாகிஸ்தானில் வெளியிட்டுள்ளது. அந்த விளம்பரத்தில் ” நாட்டை காப்பாற்ற, மோடியை நீக்கு” என்ற வாசகம் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஒரு பிரதான எதிர்க்கட்சியான காங். பாகிஸ்தானில் நமது பிரதமருக்கு எதிராக பணம் கொடுத்து விஷம பிரசாரம் செய்து கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது.. இவ்வாறு டுவிட்டரி்ல் அமித் மாளவியா பதிவேற்றியுள்ளார்.