Breaking News
தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகிற 25ந்தேதி நடைபெறும்; க. அன்பழகன்

நாடாளுமன்ற தேர்தல் வருகிற 2019ம் ஆண்டு நடைபெற உள்ளது. இதனை அடுத்து தேர்தலுக்கான பணிகளில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மற்றும் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் வருகிற 25ந்தேதி நடைபெற உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொது செயலாளர் க. அன்பழகன் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.