Breaking News
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் மேட்ச் பிக்சிங்; அல் ஜசீரா குற்றச்சாட்டு

சர்வதேச அளவிலான கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளில் வீரர்கள் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டனர் என அல் ஜசீரா தொலைக்காட்சி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுபற்றிய அறிக்கை ஒன்றில், கடந்த 2011 மற்றும் 2012 ஆகிய இடைப்பட்ட ஆண்டுகளில் நடந்த 15 சர்வதேச போட்டிகளில் 24க்கும் மேற்பட்ட மேட்ச் பிக்சிங் சூதாட்டங்கள் நடந்துள்ளன.
இதில் 7 போட்டிகளில் இங்கிலாந்து வீரர்களில் ஒரு சிறிய குழு, 5 போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர்கள் மற்றும் 3 போட்டிகளில் பாகிஸ்தானிய வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர். ஒரு போட்டியில் மற்ற அணிகளில் உள்ள வீரர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.

இவற்றில் லார்ட்சில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான போட்டி, கேப்டவுனில் நடந்த தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டி மற்றும் ஐக்கிய அமீரகத்தில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து கலந்து கொண்ட தொடரின் பல்வேறு போட்டிகளிலும் மேட்ச் பிக்சிங் நடந்துள்ளது என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

எனினும், அல் ஜசீரா அளித்துள்ள தகவல் தெளிவான விசயங்களை கொண்டிருக்கவில்லை என்றும், முன்னாள் அல்லது இன்னாளில் உள்ள இங்கிலாந்து வீரர்களின் நடத்தையில் அல்லது ஒற்றுமையில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.