Breaking News
வெஸ்ட் இண்டீஸ் போராட்டம் என்னை அசரவைத்தது’ விராட் கோலி

வெஸ்ட் இண்டீஸ் போராட்ட குணம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. கடந்தப் போட்டியில் 152 ரன் விளாசிய ரோகித் சர்மா 4 ரன்னில் ஆட்டமிழந்தார். தவான் 29 ரன்னில் ஆட்டமிழக்க, விராட் கோலியும், ராயுடுவும் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ராயுடு 80 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விராட் கோலி 106 பந்துகளில் சதம் அடித்தார்.
தோனி 20, பண்ட் 17, ஜடேஜா 13 என என அடுத்தடுத்து வீரர்கள் ஆட்டமிழந்தாலும், விராட் கோலி தனி ஆளாக கடைசி வரை நிலைத்து நின்று ஆடினார். விராட் கோலி 129 பந்துகளில் 157 ரன் குவிக்க இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் எடுத்தது. விராட் 4 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகள் விளாசினார். இந்தப் போட்டியில், 81 ரன்கள் எடுத்த போது, ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார். விராட் கோலிக்கு இந்தப் போட்டியில் அடித்தது 37வது சதம் ஆகும்.

இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடியாக விளையாடியது. அந்த அணியின் முதல் மூன்று வீர்ரகளும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனால் அதன் பின்பு ஜோடி சேர்ந்த ஹோப் மற்றும் ஹெட்மேயர் ஆகியோர் இந்திய பந்துவீச்சுகளை சிதறடித்தனர். இதனையடுத்து இந்திய அணி பவுலர்கள் விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் திணறினர். அப்போது, அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த 64 பந்துகளில் 94 ரன்களை எடுத்தபோது சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆனால் அதன் பின்பு தொடர்ந்து சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த ஹோப் சதமடித்தார். இதன் பின்பு ஹோப்புடன் இணைந்து விளையாடிய போவல் மற்றும் ஹோல்டரும் அவுட்டானபோதும் ஹோப் சிறப்பாகவே விளையாடி வந்தார்.
ஆனால், இந்திய பந்துவீச்சாளர்கள் இறுதி ஓவர்களில் சிறப்பாக பந்து வீசி ஹோப் அதிரடியை கட்டுப்படுத்தினர். கடைசி ஓவரில் 6 பந்தில் 14 ரன்கள் தேவை எனற நிலை இருந்தது. பின்பு, கடைசி பந்தில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஹோப் பவுண்டரி அடித்தார். இதனால் ஸ்கோர் “டை” ஆனது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஹோப் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 123 ரன்களை எடுத்தார். இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.