டெல்லியில் கடுமையான காற்று மாசு: மக்கள் அவதி
நாட்டின் தலைநகராக விளங்கும் டெல்லியில் நாளுக்கு நாள் சுற்றுசூழலும், காற்றின் தரமும் மாசுபடுவது அதிகரித்து வருவதால் பலருக்கு மூச்சு தினறல், கண் எரிச்சல் உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. காற்று மாசைக் கட்டுப்படுத்த டெல்லி அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்தவாறே இருக்கிறது.இந்நிலையில் டெல்லியில் காற்று மாசுபாடிலிருந்து தப்பிப்பதற்காக பொதுமக்கள் முகமூடி அணிந்த செல்ல தொடங்கியுள்ளன. சாலையிலும் வீடுகளிலும் பொதுமக்கள் முகமூடி அணியும் பழக்கம் சமீப காலத்தில் அதிகரித்துள்ளது. இதனால் டெல்லியில் முகமூடிகளின் விற்பனை அதிகரித்துள்ளது. இன்று காலை, டெல்லியில் காற்று மாசு காரணமாக எங்கும் புகை படலமாக காட்சி அளித்தது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றனர். நடைபயிற்சிக்கு செல்பவர்களும் கடும் அவதிக்குள்ளாகினர்.
டெல்லியில் உள்ள மந்திர் மர்க் பகுதியில் 707, மேஜர் தியான் சந்த் தேசிய மைதானம் பகுதியில், 676 , ஜவஹர்லால் நேரு மைதானம் பகுதியில் 681 என்ற அளவில் காற்று மாசு குறியீட்டளவு இருந்தது. இது மிகவும் அபாயகரமான அளவு ஆகும்.