Breaking News
ஜனவரி 26ல் நயன்தாராவின் ‘கொலையுதிர்க்காலம்’ ரிலீஸா?

வரும் பொங்கல் தினத்தில் ரஜினியின் ‘பேட்ட’ மற்றும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ ஆகிய இரண்டு படங்கள் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 10ல் விஸ்வாசம் திரைப்படமும், ஜனவரி 15ல் பேட்ட திரைப்படமும் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

இந்த நிலையில் இரண்டு பெரிய படங்கள் பொங்கல் தினத்தில் வெளியாவதால் ஜனவரியில் வேறு திரைப்படங்கள் வெளியாக வாய்ப்பு இல்லை என்றே கருதப்பட்டது. ஆனால் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் ‘கொலையுதிர்க்காலம்’ திரைப்படம் வரும் ஜனவரியில் ரிலீஸ் என சற்றுமுன் புதிய போஸ்டர் ஒன்றின்மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அனேகமாக ஜனவரி 26, குடியரசு தின விடுமுறையில் இந்த படம் வெளியாகலாம் என கருதப்படுகிறது.

இந்த தகவல் உண்மையானால் ஜனவரியில் நயன்தாரா நடித்த ‘விஸ்வாசம்’, மற்றும் கொலையுதிர்க்காலம் என இரண்டு திரைப்படங்கள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது

உன்னை போல் ஒருவன்’ பட இயக்குனர் சக்ரி டோலட்டி இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் நயன்தாரா, பூமிகா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன்ஷங்கர் ராஜா தயாரித்துள்ள இந்த படத்தில் கோரி கெர்யாக் ஒளிப்ப்டஹிவும், ராமேஷ்வர் பகவத் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.