Breaking News
காஷ்மீர் தாக்குதல்: பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற பிகானிர் மாவட்ட நிர்வாகம் உத்தரவு

காஷ்மீரில் இயங்கி வரும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் பாதுகாப்பு படையினர் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி பெருத்த சேதங்களை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நடத்திய தற்கொலை தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, ராஜஸ்தான் மாநிலம் பிகானிர் மாவட்ட நிர்வாகம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், மாவட்டத்தில் தங்கியுள்ள பாகிஸ்தான் நாட்டவர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும். பாகிஸ்தான் நாட்டவர்களுக்கு தங்குவதற்கு இடம் எதையும் ஓட்டல்கள் அளிக்க கூடாது. பாகிஸ்தானியர்களுக்கு வேலைவாய்ப்பு எதையும் அளிக்க கூடாது.

நேரடியாகவோ மறைமுகமாகவோ பாகிஸ்தானியர்களுடன் எந்தவித வர்த்தகத்திலும் ஈடுபடக்கூடாது. பாகிஸ்தான் நாட்டில் பதிவு செய்யப்பட்ட எந்த சிம்கார்டுகளையும் பயன்படுத்த கூடாது” என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும் எனவும் கூறப்பட்டுள்ளது. எனினும் வெளிநாட்டு குடிமக்கள் பதிவாளர் அலுவலரிடம் பதிவு செய்யப்பட்டுள்ள பாகிஸ்தானியர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்றும் விளக்கப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.