Breaking News
அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட மன்மோகன் சிங் மறுப்பு என தகவல்

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் தொகுதியில் மன்மோகன் சிங் போட்டியிட வேண்டும் என்று பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால், மன்மோகன் சிங், சாதகமான பதிலை தர தயக்கம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மன்மோகனை அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட வைக்க முயற்சிப்பது இது முதல் முறையல்ல. 2009- ம் ஆண்டு தேர்தலின் போதும் இதே போன்று கோரிக்கை வைத்த போது, தனது உடல்நிலையை காரணம் காட்டி மன்மோகன் சிங் அதனை மறுத்து விட்டார்.

1991 -ம் ஆண்டு முதல் அசாம் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்வாகியுள்ள மன்மோகன் சிங்கின் பதவி காலம் வரும் ஜூன் 14 உடன் நிறைவடைகிறது. லோக்சபா தேர்தல்களில் மன்மோகன் சிங் இதுவரை வெற்றி பெற்றது இல்லை. 1999 ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தெற்கு டெல்லி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட அவர் பாரதீய ஜனதாவின் மல்கோத்ராவிடம் தோல்வி அடைந்தார். தற்போது, அசாமில் காங்கிரசுக்கு போதிய பலம் இல்லாததால் மன்மோகன் சிங் மீண்டும் தேர்வாவதில் சிக்கல் எழுந்துள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.