Breaking News
சூர்யாவுடன் மோதும் விஜய்-பிரபுதேவா கூட்டணி!

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கிய ‘என்.ஜி.கே. திரைப்படம் வரும் மே 31 முதல் வெளியாகும் என்று ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் புரமோஷனும் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வரும் 29ஆம் தேதி வெளியாகும் என்று சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடித்த ‘தேவி 2’ திரைப்படமும் ‘என்.ஜி.கே’ வெளியாகும் அதே மே 31ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் பள்ளி, கல்லூரிகள் திறந்துவிடும் என்பதால் மே மாதமே வெளியிட வேண்டிய கட்டாயம் காரணமாக இரண்டு பெரிய படங்களும் மோதும் சூழல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

பிரபுதேவா, தமன்னா, நந்திதா ஸ்வேதா, ஆர்ஜே பாலாஜி, கோவை சரளா, குருசோமசுந்தரம், நாசர், சதீஷ், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ள ‘தேவி 2’ திரைப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்த படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த ‘தேவி’ படத்தின் அடுத்த பாகம் என்பது குறிப்பிடத்தக்கது

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.