Breaking News
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் 4 தொகுதிகளில் 137 பேர் போட்டி வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியானது

4 தொகுதி இடைத்தேர்தல்

இதில், 18 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 18-ந்தேதி நாடாளுமன்ற தேர்தலுடன் வாக்குப்பதிவு நடைபெற்றது.

மீதம் உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 22-ந் தேதி தொடங்கி 29-ந்தேதி வரை நடைபெற்றது.

137 வேட்பாளர்கள் போட்டி

4 தொகுதிகளிலும் அ.தி. மு.க., தி.மு.க., அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் என மொத்தம் 256 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். பரிசீலனையின் போது முறையாக இல்லாத மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

போட்டியில் இருந்து விலக விரும்புவோர், தங்கள் மனுக்களை வாபஸ் பெற நேற்று பிற்பகல் 3 மணி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. அப்போது 4 தொகுதிகளிலும் மொத்தம் 15 பேர் தங்கள் வேட்புமனுக் களை வாபஸ் பெற்றனர்.

இதைத்தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, 4 தொகுதிகளிலும் மொத்தம் 137 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

திருப்பரங்குன்றம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியில் 63 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தனர். இதில் கடந்த 30-ந்தேதி நடைபெற்ற பரிசீலனையின் போது 19 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. நேற்று கட்சிகளின் மாற்று வேட்பாளர்கள், சுயேச்சைகள் என 7 பேர் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர்.

எனவே இறுதியாக இந்த தொகுதியில் முனியாண்டி (அ.தி.மு.க.), டாக்டர் சரவணன் (தி.மு.க.), மகேந்திரன் (அ.ம.மு.க.), சக்திவேல் (மக்கள் நீதி மய்யம்), ரேவதி (நாம் தமிழர் கட்சி) உள்பட 37 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

அரவக்குறிச்சி

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் 77 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தனர். பரிசீலனையின் போது 23 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 68 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. நேற்று 5 பேர் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர்.

எனவே இந்த தொகுதியில் வி.வி.செந்தில்நாதன் (அ.தி.மு.க.), வி.செந்தில்பாலாஜி (தி.மு.க.), சாகுல் அமீது (அ.ம.மு.க.), மோகன்ராஜ் (மக்கள் நீதி மய்யம்), செல்வம் (நாம் தமிழர் கட்சி) உள்பட 63 பேர் களத்தில் உள்ளனர்.

சூலூர்

சூலூர் தொகுதியில் 48 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். பரிசீலனையின் போது 26 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 22 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. யாரும் வேட்பு மனுக் களை வாபஸ் பெறவில்லை.

இந்த தொகுதியில் பி.கந்தசாமி(அ.தி.மு.க.), பொங்கலூர் நா.பழனிசாமி(தி.மு.க.), கே.சுகுமார்(அ.ம.மு.க.), ஜி.மயில்சாமி (மக்கள் நீதி மையம்), எம்.வி.விஜயராகவன்(நாம் தமிழர் கட்சி) உள்பட 22 பேர் களத்தில் உள்ளனர்.

ஓட்டப்பிடாரம்

ஓட்டப்பிடாரம் தொகுதியில் 37 பேர் மனுதாக்கல் செய்து இருந்தனர். பரிசீலனையின் போது 19 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நேற்று 3 பேர் தங்கள் வேட்பு மனுக் களை வாபஸ் பெற்றனர்.

இதனால் இந்த தொகுதியில் பெ.மோகன் (அ.தி.மு.க.), செ.சண்முகையா (தி.மு.க.), இரா.சுந்தரராஜ் (அ.ம.மு.க.), மு.காந்தி (மக்கள் நீதி மய்யம்), மு.அகல்யா (நாம் தமிழர் கட்சி) உள்பட 15 பேர் போட்டியிடுகிறார்கள்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.