Breaking News
கொக்கி கழன்றதால் தண்டவாளத்தில் சேதம்

வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின், பெட்டி இணைப்பு கொக்கி கழன்று, தண்டவாளத்தில் துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரையில் இருந்து, சென்னைக்கு, நேற்று காலை, வைகை எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. மணப்பாறை அடுத்த கண்ணுடையாம்பட்டி ரயில்வே, ‘கேட்’ அருகே சென்றபோது, ரயில் பெட்டியின் இணைப்பு கொக்கி ஒன்று கழன்று, தண்டவாளத்தைச் சேதப்படுத்தியது. ரயில் சென்றுக் கொண்டிருந்ததால், கொக்கி, 100 அடி துாரம் வரை, பலத்த சத்தத்துடன், தண்டவாளத்தை சேதப்படுத்தியது.சத்தம் கேட்டு, ரயிலை நிறுத்திய ஓட்டுனர், தண்டவாளத்தை ஆய்வு செய்தார். அதில், ரயில்கள் செல்ல, எந்த பிரச்னையும் இல்லை என்பதால், இதுகுறித்து, மணப்பாறை ரயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.இதையடுத்து, 10 நிமிடம் தாமதமாக, வைகை எக்ஸ்பிரஸ் புறப்பட்டுச் சென்றது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.