இந்தியாவில் முதல் முறையாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் அலை தொடர்ந்து நமது நாட்டைத் தாக்கி வருகிறது. தினந்தோறும் இந்த கொடிய தொற்றுநோயின் தாக்குதலுக்கு ஆளாகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இது அதிர வைப்பதாக அமைந்துள்ளது.
அந்த வகையில் இன்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரே நாளில் நாடு முழுவதும் புதிதாக 1 லட்சத்து 03 ஆயிரத்து 249 பேருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்ட ஒருநாள் அதிகபட்ச கொரோனா பாதிப்பு இதுதான் ஆகும். கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 478- பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானோர் எண்ணிக்கை 1 கோடியே 25 லட்சத்து 89 ஆயிரத்து 067 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 16 லட்சத்து 82 ஆயிரத்து 136 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 7 லட்சத்து 41 ஆயிரத்து 830- பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனாவுக்கு இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 65 ஆயிரத்து 101- ஆக உள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எண்ணிக்கை 7 கோடியே 91 லட்சத்து 05 ஆயிரத்து 163- ஆக உயர்ந்துள்ளது.