Breaking News

டெல்லி

தேசிய குற்ற ஆவணம் வெளியிட்டுள்ள தகவலின்படி , 2020 ஆம் ஆண்டில் தகவல் தொழில்நுட்ப சட்டதின் கீழ் பதிவுசெய்யப்பட்ட குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் 2019 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது 400 சதவீதம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

இவற்றில் பெரும்பாலானவை , குழந்தைகளை பாலியல் ரீதியாக சித்தரித்து புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவது , அது தொடர்பான தகவல்களை பரிமாறுவது உள்ளிட்டவை அடங்கியுள்ளன. இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்பாக இதுவரை பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் முதல் ஐந்து மாநிலங்கள் குறித்த விவரங்களும் வெளியாகியுள்ளன.

170 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உத்திரபிரதேசம் முதலிடத்தில் உள்ளது .அதனை தொடர்ந்து கர்நாடகாவில் 144 வழக்குகள் , மகராஷ்ராவில் 137 வழக்குகள் , கேரளாவில் 107 வழக்குகள் மற்றும் ஒடிசாவில் 71 வழக்குகள் இந்தாண்டு மட்டும் பதிவாகியுள்ளன.

மொத்தம் பதிவு செய்யப்பட்ட 842 வழக்குகளில் 738 வழக்குகள் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக காட்சிகளை காண்பிப்பது , பாலியல் ரீதியாக சித்தரித்து புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவது , பாலியல் தொடர்பான தகவல்களை பகிர்வது உள்ளிட்ட காரணங்களுக்காக தொடரப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி குழந்தை உரிமை மற்றும் பாதுகாப்பு அமைப்பான கிரை அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி பூஜா மர்வாஹா கூறியதாவது :

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பள்ளிகள் திறக்கபடாத காரணத்தால் ஆன்லைன் வழியில் மாணவர்கள் கல்வி கற்கும் சூழலுக்கு உள்ளாகினர்.

இதனால் அதிக நேரத்தை பொழுது போக்கு ,கல்வி நோக்கங்களுக்காக குழந்தைகள் ஆன்லைனில் செலவிட வேண்டியுள்ளது.அதே சமயம் அதில் இருக்ககூடிய ஆபத்துகள் குறித்து சரியான வழிகாட்டுதல்கள் குழந்தைகளுக்கு அளிக்கப்படாததால் அவர்கள் இது போன்ற சைபர் குற்றங்களுக்கு இரையாகின்றனர்.

குழந்தைகள் மீது நடத்தப்படும் இது போன்ற அத்துமீறல்களை தடுப்பதில் பெற்றோர் , ஆசிரியர்கள், பாதுகாவலர்கள் கவனத்துடன் இருந்து கண்காணித்து நெறிப்படுத்த வேண்டும்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.