Breaking News
காணாமல் போன குளம் – கண்டுபிடித்த ஊர்மக்கள்…!
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் உடன்குடி அருகே குளங்களை பொதுமக்கள் சேர்ந்து புனரமைத்து வருவதால்  விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
உடன்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவது மட்டுமின்றி, தண்ணீரில்  அதிக உப்பு தன்மை இருப்பதால் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக ஆய்வறிக்கைகள் மூலம் தெரியவந்தது.
50 ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தடி நீரை பயன்படுத்தி இங்கு விவசாயம் செழித்து காட்சியளித்ததோடு, இங்கிருந்து வெற்றிலை கடல் கடந்து இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது.
ஆனால், காலப் போக்கில் தூர்வாரப்படாத குளங்கள், நீர்வழித்தடங்களில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக நிலத்தடி நீர் பொய்த்துபோனது.
சமூக செயற்பாட்டாளர் வள்ளி சரணின் ’ஊர் கூடி ஊரணி காப்போம்’ என்ற அமைப்பின் மூலம் நீர்நிலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட மக்கள், தற்போது  அதில் வெற்றி கண்டுள்ளனர்.
நீரை உறிஞ்சக்கூடிய கருவேல மரங்கள் தமிழக அரசின் ஒப்புதலுடன் அப்புறப்படுத்தப்படுகின்றன. 3 வருடத்திற்குள் குளங்களை மீட்டெடுக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ள நிலையில் முதல் வெற்றியாக சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு சீரமைக்கப்பட்ட கால்வாய் மூலம் சடயனேரி குளத்தில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் தண்டுபத்து பகுதியில் உள்ள குளத்திற்கு வந்துள்ளது.
தடம் தெரியாமல் போன ஒவ்வொரு குளங்களிலும் மீண்டும் தண்ணீரை தடம் புரண்டு ஓட வைக்க ஒவ்வொரு ஊரிலும் பொதுமக்கள் தாங்களாக முன்வரவேண்டும் என்பது இந்த ஊர் மக்களின் கோரிக்கையாக உள்ளது.
Related Tags :

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.