Breaking News
வடபழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 23-ந்தேதி நடக்கிறது

சென்னை

சென்னை வடபழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அனைத்து பணிகளும் முடிவு பெற்று கோவில் கும்பாபிஷேகத்திற்கு தயார் நிலையில் உள்ளதால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைப்படி வருகிற ஜனவரி 23-ந்தேதி அன்று குடமுழுக்கு நடத்த தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.

இக்கோவிலில் முகூர்த்த நாட்களில் கூட்டம் நிரம்பி வழியும். அவ்வாறான நாட்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி திருமணங்கள் நடத்துவதற்கு 43 முகூர்த்த மண்டபங்கள் அமைக்கப்படவுள்ளன. கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் பங்கேற்பது குறித்து அப்போதைய கொரோனா கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு நிச்சயம் அனுமதி அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஜெ. குமரகுருபரன், கோவில் தக்கார் ஆதிமூலம், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மயிலை த.வேலு, ஜெ.கருணாநிதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.