Breaking News
டி.என்.ஏ., தடுப்பூசியின் சிறப்பம்சம்: பிரதமர் மோடி அறிவிப்பு

புதுடில்லி-‘உலகின் முதல் டி.என்.ஏ., வகை கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும்’ என, பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் அறிவித்தார்.

latest tamil news

முழுதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் இரண்டாவது மருந்தாக இது அமைய உள்ளது.கொரோனாவுக்கு எதிராக தற்போது ‘கோவாக்சின், கோவிஷீல்டு’ தடுப்பூசிகள் நம் நாட்டில் பயன்பாட்டில் உள்ளன. ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் – வி’ தடுப்பூசியை பயன்படுத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.தற்போது ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

இதையடுத்து நேற்று முன்தினம் சில புதிய அறிவிப்புகளை பிரதமர் மோடி வெளியிட்டார். அப்போது 15 வயதுக்கு மேற்பட்ட குழந்தை களுக்கு தடுப்பூசி, முன்களப் பணியாளர்களுக்கு கூடுதல் டோஸ் வழங்கப்படும் என, அவர் அறிவித்தார்.அத்துடன் உலகிலேயே முதல் முறையாக டி.என்.ஏ., எனப்படும் மரபணு வகை தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என அவர் அறிவித்தார்.

latest tamil news

இந்த தடுப்பூசியின் சிறப்பம்சங்கள்: குஜராத் மாநிலம் ஆமதாபாதை தலைமையிடமாக வைத்து செயல்படும் ‘சைடஸ் கேடிலா’ என்ற நிறுவனம் இந்த தடுப்பூசியை தயாரித்து உள்ளது இதைப் பயன்படுத்த ஆகஸ்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டுஉள்ளது இதை செலுத்துவதற்கு ஊசி தேவையில்லை சிறப்பு கருவி மூலம் தோலுக்குள் செலுத்த வேண்டும் மூன்று ‘டோஸ்களை’ தலா, 28 நாட்கள் இடைவெளியில் செலுத்த வேண்டும் டி.என்.ஏ., அடிப்படையிலான முதல் தடுப்பூசி இது ஒரு டோஸ் விலை 265 ரூபாயாகவும், அதை செலுத்தும் கருவியின் விலை 93 ரூபாயாகவும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது மத்திய அரசு இந்த ஊசிகளை கொள்முதல் செய்து, நாட்டு மக்களுக்கு இலவசமாக வழங்க உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.