340 வருட வரலாற்றில் சென்னைக்கு பெண் மேயர்.. 21 மாநகராட்சிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு!!
சென்னை: தமிழகம் முழுவதும் மாநகராட்சி மேயர்கள் பதவியேற்பு விழா காலை முதல் ரிப்பன் மாளிகையில் நடைபெற்று வருகிறது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகளில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற மேயர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். சென்னை மாநகராட்சி மேயராக திமுக வேட்பாளர் பிரியா ராஜன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுகவின் பிரியா மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவித்தார். இதையடுத்து சென்னை மாநகராட்சியின் 49வது மேயராக பிரியா ராஜன் பொறுப்பேற்றார். தொடர்ந்து சிவப்பு நிற அங்கி அணிந்து மேயர் இருக்கையில் அமர்ந்தார் பிரியா. அமைச்சர்கள் சேகர் பாபு, மா.சுப்பிரமணியன் மற்றும் மயிலை எம்எல்ஏ த.வேலு ஆகியோர் இணைந்து பிரியா ராஜனுக்கு செங்கோல் வழங்கினர்.