Breaking News
உக்ரைன் – ரஷியா போர் : சமையல் எண்ணெய் விலை இருமடங்காக உயர்வு
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 43 நாட்களாகி விட்டன. உக்ரைன் – ரஷிய படைகள் இடையே தீவிர சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது.
போரை கைவிட பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில்  உக்ரைன் – ரஷியா போர் இன்னும் முடுவுக்கு வரவில்லை.
இந்நிலையில்  உக்ரைன் – ரஷ்யா போர் சூழலால் சமையல் எண்ணெய் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது
 சமையலுக்கு பயன்படுத் தக்கூடிய சூரியகாந்தி எண்ணெயை உக்ரைன் நாடு அதிகளவில் உற்பத்தி செய்து வழங்குகிறது .அந்த நாட்டில் இருந்து இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகளுக்கு கப்பல் மூலம் சூரியகாந்தி எண்ணெயை வினியோகிக்கப்படுகிறது.உக்ரைன் – ரஷ்யா போர் சூழலால்  சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது
இதனால்  போருக்கு முன் ரூ 100ஆக இருந்த ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் விலை தற்போது ரூ 200ஆக உயர்ந்துள்ளது.
 நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.