“தமிழ்நாட்டில் மட்டும் தான் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை,
இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் தான் வடமாநில தொழிலாளர்கள் பத்திரமாக உள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
முதல் அமைச்சரின் பிறந்தநாள் விழாவில் வட இந்திய அரசியல் தலைவர்கள் பங்கேற்றதால் சிலருக்கு பொறாமையில் உள்ளதாகவும், பொறாமையின் காரணமாக, வட இந்திய தொழிலாளர்கள் மீது தாக்குதல் என வதந்தி பரப்புகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.