Breaking News
நன்றி..நன்றி..!: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு தர தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கை திருப்பதிகரமாக உள்ளது..பீகார் அதிகாரிகள் குழு பேட்டி..!!

சென்னை: தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் குறித்து பீகார் அரசு சார்பாக தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து பீகார் குழு பேட்டியளித்துள்ளது. தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோ சமூக வலை தளங்களில் கடந்த சில நாட்கள் முன்பு பரவியதால் பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சியினர் அங்குள்ள சட்டசபையில் இதுகுறித்து கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். ஆனால், தமிழக அரசும், காவல்துறையும் மறுப்பு தெரிவித்து, வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் வதந்திகளை பரப்பியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்ய தனிப்படைகளும் அமைக்கப்பட்டது.

இதையடுத்து, பீகாரில் இருந்து லோக் ஜன சக்தி கட்சித் (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பஸ்வான் எம்.பி. நேற்று விமானம் மூலம் சென்னை வந்த அவர், பல்லாவரம், தாம்பரம் மற்றும் புறநகரில் உள்ள பீகார் தொழிலாளர்களை சந்தித்து தமிழகத்தில் நிலவும் நிலைமைகளை குறித்து கேட்டறிந்தானர்.  இதன்பின் பேசிய சிராக் பஸ்வான் எம்.பி., பீகார் – தமிழ்நாடு இடையே நிலவும் நல்லுறவை கெடுக்க சிலர் முயற்சி செய்கின்றனர். சமூக வலைத்தளத்தில் போலி தகவல்களை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

இதனை தொடர்ந்து இன்றும் பீகார் மாநில ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் பாலமுருகன் உள்ளிட்ட அதிகாரிகள் தமிழ்நாடு வந்தனர். திருப்பூர், கோவையில் புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்த குழுவினர் தலைமை செயலாளருடன் ஆலேசனை நடத்தினர். பின்னர், பீகார் அதிகாரிகள் குழு தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து அதிகாரி ஜெகநாதன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது பேசிய அதிகாரிகள் கூறியதாவது; கடந்த 4 நாட்களாக தமிழ்நாட்டில் ஆய்வு செய்துள்ளோம். திருப்பூரில் 3 இடங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்கள் மற்றும் தொழிலாளர்களின் அனுமதியுடன் அவர்களது செல்போன்களையும் ஆய்வு செய்தோம்.

பீகாரில் இருந்து 30 ஆண்டுகள், 15 ஆண்டுகளாக பணிபுரிபவர்களும் உள்ளனர். மேலும், பீகாரில் இருந்து தமிழ்நாடு வந்த தொழிலதிபரானவர்களையும் நாங்கள் சந்தித்து பேசினோம். புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு தர தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கை திருப்திகரமாக உள்ளது. வதந்திகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு எவ்வளவு வேகமாக நடவடிக்கை எடுத்தது என்பதையும் நாங்கள் பார்தோம். செல்போன் மூலமாக பீகார் தொழிலாளர்களுக்கு வரப்பெற்ற செய்தி பொய்யானது என்று தெரியவந்துள்ளது. வேறு மாநிலங்களில் நடந்த சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்ததுபோல் சித்தரித்து தொழிலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.