Breaking News

வண்டலூர் தாசில்தார் பாலாஜி லஞ்சம் வாங்கிக் கொண்டு போலி பத்திரத்திற்கு பட்டா வழங்கியுள்ளார்.இதனால் இவரை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சஸ்பென்ட் செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. செங்கற்பட்டு மாவட்டம், வண்டலூர் தாலூக்கா, ஒத்திவாக்கம் மதுரா அம்மணம்பாக்கம் கிராமம் புல எண்.122/ 9 ல் பரப்பு 0.05.0 ஏர்ஸ் 12 சென்ட் நன்செய் நிலம்.இந்த நிலம் உமையவள்ளி( வயது 75) என்பவருக்கு சொந்தமானது.இதே போல இதே கிராமம் புல எண் 122/ 11 ல் பரப்பு 0.47 சென்ட் நன்செய் நிலம் உமையவள்ளி மகள்கள், மகன்களுக்கு சொந்தமானது. இதே கிராமத்தில் புல எண் 122/ 8 ல் பரப்பு 0.15 சென்ட் நன்செய் நிலம் உமையவள்ளிக்கு சொந்தமானது. இந்த நிலத்தில் புல எண். 122/8 ல் பரப்பு 15 சென்ட் நிலத்தை அம்மணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் என்பவருக்கு உமையவள்ளி 1994 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22 ந்தேதி விற்பனை செய்கிறார்.இதனை ஞானப்பிரகாசம் திருப்போரூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்யும் போது, மோசடியாக புல எண் 122/9 ல் 0.50 சென்ட் என்று மொத்தம் 0.65 என்று பத்திரம் செய்துவிட்டார். பின்னர் புல எண் 122/8 ல் உள்ள பரப்பு 0.15 சென்ட் நிலத்தை ஞானப்பிரகாசம் அம்மணம்பாக்கத்தைச் சேர்ந்த அமுல்ராணிக்கு விற்று விடுகிறார்.மீதமுள்ள 0.50 சென்ட் நிலத்திற்கு பட்டா ,சிட்டா, அடங்கல் ,நில வரைப்படம் கேட்டு கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியருக்கு விண்ணப்பிக்கிறார். ஆனால் பட்டா கொடுக்கவில்லை. காரணம் வருவாய் துறை ஆவணங்கள்படி புல எண் 122/9 ல் பரப்பு 12 சென்ட் என்று தான் உள்ளது.ஆனால் பத்திரத்தில் 0.50 சென்ட் என்று உள்ளது.இதனால் பத்திரத்தில் உள்ள பரப்பளவு பிழையை, பிழை திருத்தல் பத்திரம் மூலம் புல எண்.122/9 ல் பரப்பு 12 என்று திருத்தம் செய்து வந்தால். பட்டா தருகிறேன் எனக் கூறியுள்ளனர்.ஆனால் ஞானப்பிரகாசம் 1994 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை , பிழைத் திருத்தல் பத்திரம் செய்யாமல், வண்டலூர் வட்டாட்சியர் பாலாஜிக்கு லஞ்சம் கொடுத்து புல எண்.உட்பிரிவு 122/9 B ல் பரப்பு 0.50 சென்ட் பட்டா வாங்கி உள்ளார்.பட்டா எண்.4053 நாள் 9.12.2022. இந்த பட்டாவின் மூலம் மோசடி பத்திரம் 431/1994 பத்திரத்தை பிழைத் திருத்தல் பத்திரம் செய்யாமல் , பட்டா எண்.4053 ன்படி, ஞானப்பிரகாசம் ஜான்சன் என்பவருக்கு விற்பனை செய்து உள்ளார். இந்த பத்திரத்திற்கும் வண்டலூர் வட்டாட்சியர் பாலாஜி லஞ்சம் பெற்றுக் கொண்டு பட்டா வழங்கி உள்ளார்.பட்டா எண் 4074 .இதில் என்ன கொடுமை என்றால் , இன்று வரை திருப்போரூர் சார் பதிவாளர் அலுவலக பதிவேடுகளில், அம்மணம்பாக்கம் வருவாய் பதிவேடுகளில் புல எண். 122/9 ல் பரப்பு 0.05.0 ஏர்ஸ் 12 சென்ட் என்று தான் உள்ளது. ஆனால் புல எண் உட்பிரிவு 122/ 9 B ல் பரப்பு 0.50 சென்ட் என்று , போலி பத்திரத்திற்கு பட்டா வழங்கிய வண்டலூர் வட்டாட்சியர் சஸ்பென்ட் செய்யப்படுவாரா. மேலும் தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ஞானபிரகாசத்திடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு. விசாரணை என்ற பெயரில் அம்மணம்மபாக்கம் புல எண் 122/9 ல் பரப்பு 0.12 நிலத்திற்கான ஆன்லைன் பட்டா 40 மற்றும் புல எண் 122/11 ல் பரப்பு 0.47 சென்ட் பரப்பிற்கான ஆன்லைன் பட்டா எண் 3610 ரத்து செய்து விட்டு, ஞானப்பிரகாசம் மோசடி பத்திரத்திற்கு பட்டா வழங்கியது எப்படி. தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர், வண்டலூர் வட்டாட்சியர் பாலாஜி, தாம்பரம் வருவாய் கோட்டாட்சிர் அலுவலக உதவியாளர் ராஜா ஆகிய 3 பேரும் சஸ்பென்ட்செய்ய வேண்டும் என மூதாட்டி உமைவள்ளி கோரிக்கை வைத்துள்ளார். செங்கற்பட்டு கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.