அய்யப்பன்தாங்கலில் உயிர் தப்பிக்க வீட்டினுள் ஓடி ஒளிந்த பிரபல ரவுடி வெட்டிக் கொலை படுகொலை
, சென்னை போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கல் சுப்பிரமணியம் நகர் பொன்னியம்மன் கோயில் தெருவில் நேற்று இரவு வாலிபர் ஒருவர் ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் அந்த வாலிபர் வந்த போது, 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டிய போது, ரவுடி பயந்து அருகில் இருந்த வீட்டுக்குள் நுழைந்து கதவை சாத்திய போது , கதவை உடைத்து ரவுடியை வெட்டிக் கொலை செய்து விட்டு கொலையாளிகள் தப்பியோடிஓடிவிட்டனர்.
அய்யப்பன்தாங்கல் அடுத்த பெரியபணிச்சேரி பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 25) .இவர் அந்த பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்தார்
. இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த ஆண்டு இவரது தம்பி மாங்காட்டில் வைத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அதற்கு பழி வாங்கும் நோக்கில் நாட்டு வெடிகுண்டுகளை வினோத் எடுத்து சென்ற போது பரணிபுத்தூர் அருகே தவறி விழுந்து நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து சிதறின. இது தொடர்பாக அப்போது மாங்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்து வினோத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் சிறையிலிருந்து வினோத் வெளியே வந்துள்ளார். நேற்று இரவு 8 மணியளவில் அய்யப்பன்தாங்கல் சுப்பிரமணி நகர் பொன்னியம்மன் கோவில் தெருவில் ரவுடி வினோத்மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் ரவடி வினோத்தை வழி மறித்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த ரவுடி வினோத் மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு , உயிர் தப்பிக்க ஓடி அருகே இருந்த வீட்டினுள் புகுந்து கதவை சாத்திக் கொண்டார்.
ஆனாலும் 6 பேர் கொண்ட கும்பல் கதவை உடைத்து உள்ளே சென்று வினோத்தை பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்தனர்.இதனை அந்த வீட்டில் உள்ளவர்கள் பார்த்து அலறினார்கள்.ஆனாலும் வீட்டில் உள்ளவர்களை கொலையாளிகள் தாக்கவில்லை. வினோத்தை வெட்டி படுகொலை செய்த கும்பல் தப்பி ஓடிவிட்டது.
இதுபற்றி அய்யப்பன்தாங்கல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ,விசாரணை நடத்தினர்.பின்னர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொலைப் பற்றி போரூர் எஸ்.ஆர்.எம்.சி.போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றார். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சி.சி.டி.வி.காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வில் கொலையாளிகள் யார் என்பதை கண்டுபிடித்தனர்.இதனால் விரைவில் கொலையாளிகள் கைது செய்யப்படுவார் என தெரிவித்தனர்.
மேலும் இந்த கொலை முன் விரோதத்தில் நடைபெற்றது என தெரிய வந்துள்ளது. கொலையாளிகளை பிடிக்க ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் 3 தனிப்படைகள் அமைத்துள்ளார்.இந்த தனிப்படை இன்றைக்குள் கொலையாளிகள் பிடிக்கப்படுவார்கள் என தெரிவித்தனர்.
இந்த படுகொலை சம்பவம் அய்யப்பன்தாங்கல் பகுதியில் அச்சத்தையும், பீதியை ஏற்படுத்தி உள்ளது.