Breaking News

 

 

 

தமிழ் திரைப்படங்களில் நல்ல கதாபாத்திர வேடங்களில் நடித்து

வைகைபுயல் வடிவேலுவின் மகனாக இயக்குனர் வி.சேகர் இயக்கிய கூடி வாழ்ந்தால் கோடி நன்மை (1999) திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.பிளாக் பாண்டியின் இயற்பெயர் சே.லிங்கேஸ்வரன் இவர் காமெடியில் கலக்கி கனா காணும் காலங்கள் (ஸ்டார் விஜய்), அங்காடி தெரு படத்தின் மூலம் பிரபலமானார்.

 

திரைப்படங்களின் நடிப்பது மட்டுமல்லாமல் பாடல்களுக்கு இசையமைப்பது பாடல்கள் எழுதுவது சிறந்த இசை அமைப்பாளரும் கூட தன் முயற்சியால் வலம் வந்தவர் பட்டதாரி பெண்மணியான உமேஷ்வரி பத்மினியை மணந்து கொண்டார்.

 

இவர் உதவும் மனிதம் அறக்கட்டளை மூலம் ஏழை எளியவர்களுக்கு உணவு வழங்குவது வெளிமாநிலங்களில் உள்ளவர்களுக்கும் உணவுப் பொருள்களுக்கான அனைத்து பொருட்களும் வழங்குவது கொரோனா காலங்களில் உதவும் மனிதம் அறக்கட்டளை மூலம் தனது நண்பர்களின் உதவியோடு இலங்கை அகதிகளுக்கு உணவு பொட்டலங்கள் அரிசி உணவு தானியங்கள் வழங்கி உள்ளார்.

தினமும் முடிந்த அளவிற்கு தனது தங்கை மகாலெஷ்மி ஸ்ரீகார்த்திகேயன் உதவியுடன் அன்னதான சேவையை தமிழ்நாடு முழுவதும் செய்து வருகிறார்.

மேலும் கல்லூரி மாணவர்களோடு உரையாடுவது பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பது சிறு குழந்தைகளோடு தனது வாழ்க்கை வரலாற்றை பகிர்வது அதுமட்டுமல்லாமல் திரைப்பட பிரபலங்களுக்கும் முதியோர்களுக்கும் இந்த அறக்கட்டளை மூலம் பண உதவிகளும் செய்துள்ளார்.

உண்மையாக கஷ்டப்படும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை தாங்கி பிடிக்கும் கைகளாக தனது ரசிகர்கள் தனக்குத் தெரிந்த நண்பர்கள், சகோதரர, சகோதரிகளை ஒன்றிணைத்து உதவும் மனிதம் அறக்கட்டளை மூலம் பலரது வாழ்க்கைக்கு உதவிகள் செய்து தாங்கிப்பிடித்துக்கொள்கிறார்.

 

இவர் வெளியிட்ட அறிக்கையில் நடிப்பது மட்டும் என் வேலை அல்ல அன்பே நிலையானது என்றும் இல்லாதவர்க்கு இயன்றதை செய்வோம்

இணைந்தே செய்வோம் என்றும் உதவும் மனிதம் என்ற அறக்கட்டளை மூலம் நம்மால் இயன்றவரை அனைவருக்கும் உதவிட வேண்டுமென்றும் ஆத்மார்த்தமான கருத்தை வெளியிட்டுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.