மதுரவாயலில் மாஞ்சா நூல் காற்றாடி பறக்கவிட்டதில் வாலிபருக்கு காயம் 6 பேர் கைது
மதுரவாயலில் மாஞ்சா நூல் காற்றாடி பறக்கவிட்டதில் வாலிபருக்கு காயம் ஏற்பட்டது.இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரவாயல் தாம்பரம் 200 அடி புறவழிச் சாலையில் டோல்கேட் அருகே சம்பவத்தன்று பகலில் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் சென்றார்.அப்போது மாஞ்சா பூசப்பட்ட காற்றாடி நூல் வாலிபரின் கழுத்தில் அகப்பட்டது.இதில் அந்த வாலிபருக்கு லேசான காயம் ஏற்பட்டது.இதனை அந்த வாலிபர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.இது வைரலாகியது. இதனால் இதபற்றி மதுரவாயல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசானணை நடத்தினர்.விசாரணையில் சம்பவம் நடந்த பகுதியில் காற்றாடி பறக்கவிட்டதாக மதுரவாயலைச் சேர்ந்த துரைமாணிக்கம் (வயது 42) பாலாஜி (வயது 24) கணேசன் (வயது 43) வேல் (வயது 27 ) அரிகிருஷ்ணன் (வயது 27) முரளி (வயது 31) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.அவர்களிடமிருந்து 6 காற்றாடிகள் , 4 மாஞ்சா நூல் , நூல் தயாரிக்க வைத்து இருந்த மூலப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் காற்றாடி பறக்கவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.