Breaking News

போரூரில் ஆவடி காவல் ஆணையரகத்தின் சார்பில் போதையில்லா தமிழ்நாடு விழிப்புணர்வு விளையாட்டு போட்டிகள்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை துவக்கி வைக்கிறார்

 

, போரூரில் ஆவடி காவல் ஆணையரகத்தின் சார்பில் போதையில்லா தமிழ்நாடு விழிப்புணர்வு விளையாட்டு போட்டிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிக்காட்டுதலின்படி போதையில்லா தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்க , ஆவடி காவல் ஆணையரக ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.அதன்படி கடந்த அக்டோபர் மாதம் 2 ந்தேதி ஆவடி இரவு மாரத்தான் போட்டி நடைபெற்றது.இந்த போட்டியில் நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்து பலர் கலந்து கொண்டனர்.இந்த போட்டியில் சேகரிக்கப்பட்ட பதிவு கட்பணங்கள் சென்னை எழும்பூரில் உள்ள குழந்தை சுகாதாரம் நிறுவனம் மற்றும் குழந்தைக்களுக்கான மருத்துவமனை இயக்குனரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதே போல இந்த ஆண்டும் ஆவடி காவல் ஆணையரகத்தின் சார்பில் போதையில்லா தமிழ்நாடு உருவாக்க விளையாட்டு போட்டிகள் நாளை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளை ஆவடி காவல் ஆணையரகம், இந்தியன் டிரையத்லான் கூட்டமைப்பு மற்றும் சென்னை ரன்னர் கிளப் ஆகியை இணைந்து நடத்துகின்றன.

இந்த போட்டிகளை தமிழ்நாடு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.

இதில் ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல் , நீச்சல் போன்ற விளையாட்டு போட்டிகள் நடைபெறும்.இந்த போட்டிகளில் ஏற்கனவே பெயர் பதிவுசெய்தவர்கள் மட்டும் போட்டிகளில் கலந்து கொள்ள முடியும்.மற்றவர்கள் குடும்பம் , குடும்பமாக பார்வையாளர்களாக கலந்து கொள்ளலாம்.இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு குளிர்பானங்கள் , குடிநீர் வழங்கப்படும்.

 

இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் 16 வயது முதல் 17 வயது வரை ஜூனியர்களாகவும், 17 வயதிலிருந்து 40 வயதுக்குட்பட்டவர்கள் சீனியர்களாவும், 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் முதுநிலை சீனியர்களாகவும் கருதப்படுவர்.

இந்த 3 பிரிவினரும் 750 மீட்டர் நீச்சல் போட்டி, 20 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டப் போட்டி, மற்றும் 4 கிலோ மீட்டர் ஓட்டங்களில் கலந்து கொள்ளவர்.

 

மகளிருக்கான டிரைலத்லான் போட்டிகள் நாளை மாலை 4 மணிக்கு துவங்கும், ஆண்கள் டிரைலத்லான் போட்டிகள் 4 .20 மணிக்கு துவங்கப்படும்.ஆண்கள் மற்றும் பெண்கள் டிரையத்லான் போட்டிகள் மாலை 4.45 மணிக்கு துவங்கும்.போட்டியில் பங்கு பெறுபவர்களுக்கு தனித் தனி பரிசுகள் உண்டு.

 

மேற்கண்ட தகவலை சென்னையில் நேற்று நடைபெற்ற பத்திரியாளர்கள் சந்திப்பில் ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.