திருமுல்லைவாயலில் நடந்து சென்ற பெண்ணிடம் 4 சவரன் தங்கச்சங்கிலி பறிப்பு.
திருமுல்லைவாயலில் நடந்து சென்ற பெண்ணிடம் 4 சவரன் தங்கச் சங்கலி பறிக்கப்பட்டது.ஆவடி அருகே திருமுல்லைவாயல், பகுதியைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவர் ஆவடி மாநகரப் போக்குவரத்து கழகப் பணிமனையில் நடத்துனராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஸ்ரீதேவி (42வயது ). இவர்களுக்கு பிரியங்கா (வயது 21) என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஸ்ரீதேவி, தனது மகள் பிரியங்காவுடன் அம்பத்தூரில் நடைபெற்ற உறவினர் திருமணத்திற்கு சென்றார்.பின்னர் வீட்டுக்கு திரும்பி வரும் வழியில் திருமுல்லைவாயல், சரஸ்வதி நகர் பிரதான சாலையில் , இரு சக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள் ஸ்ரீதேவியை வழிமறித்து, அவரது கழுத்தில் இருந்த 4 சவரன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு பைக்கில் தப்பி சென்றனர். இது குறித்து ஸ்ரீதேவி திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, வழிப்பறி செய்த 2 வாலிபர்களை தேடி வருகின்றனர்.மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் மூலமாக வழிப் பறி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.