மேக் இன் உ.பி., திட்டம்: யோகி அறிமுகம்
மத்திய அரசு திட்டத்தை போல், உ.பி.,யில், மேக் இன் உ.பி., திட்டத்தை துவக்க, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு, ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை துவக்கி, உலக நாடுகளை, இந்தியாவில், தங்கள் உற்பத்திப் பொருட்களை தயாரிக்கும்படி வலியுறுத்தி வருகிறது. பல உலக நாடுகள், இந்தியாவில் தங்கள் தொழிற்சாலைகளை நிறுவி வருகின்றன. இந்நிலையில், மத்திய அரசு திட்டத்தை போல், உ.பி.,யிலும் துவக்க, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக, உ.பி., மாநில, புதிய தொழில் முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டு கொள்கை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய அரசு துவக்கியுள்ள, ‘மேக் இன் இந்தியா’ திட்டம், அதிகளவில் முதலீடுகளை கொண்டு வரச் செய்துள்ளது. அதேபோல், இந்தியாவின் உற்பத்திக் களமாக, உ.பி.,யை மாற்றும் நோக்கில், மேக் இன் உ.பி., திட்டம் துவக்கப்பட உள்ளது.
இதற்காக, மேக் இன் உ.பி., துறை, பிரத்யேகமாக உருவாக்கப்படும். இத்துறை, உ.பி., மாநிலத்துக்கு முதலீடுகளை ஈர்க்கவும், உற்பத்தி மண்டலங்களை உருவாக்கவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இதனால், உற்பத்தி, வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.