இரட்டை இலை துளிருமா? எதிர்பார்ப்பு அதிகரிப்பு
தலைமை தேர்தல் கமிஷனராக, அச்சல் குமார் ஜோதி பதவியேற்கவுள்ள நிலையில், இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு, அ.தி.மு.க.,வில் அதிகரித்துள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., இரண்டாக பிரிந்ததால்,அந்த கட்சியின் இரட்டை இலை சின்னத்தை, தேர்தல் கமிஷன் முடக்கி வைத்தது. அ.தி.மு.க., பொதுச்
செயலராக, சசிகலா பொறுப்பேற்றது செல்லாது என்ற புகார் காரணமாகவும், அந்த கட்சியில் கடும் குழப்பம் நிலவி வருகிறது.
இந்நிலையில், இந்த விவகாரத்தைஆரம்பம் முதலே கையாண்டு, தீர்ப்பை வழங்கும் இடத்தில் இருந்து வந்தவர், தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி. பிரச்னை முடிவுக்கு வராத நிலையில், இன்றுடன் அவர், ஓய்வு பெறுகிறார்.புதிய தலைமை தேர்தல் கமிஷனராக, அச்சல் குமார் ஜோதி பொறுப்பேற்க உள்ளார்.
இவர், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் தலைமைச்செயலராக பணியாற்றிய வர். இதனால், இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும், சசிகலாவின் பொதுச் செயலர் தேர்வு என்ன ஆகும் என்ற எதிர்பார்ப்பு,அ.தி.மு.க., வட்டா ரத்தில் அதிகரித்துள்ளது.இருப்பினும்,
அச்சல் குமார் ஜோதிக்கும், வரும்ஜனவரி வரை தான் பதவிக்காலம்; அதற்குள், இந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்படுமா அல்லது அ.தி.மு.க.,வில் குழப்பங்கள், அதற்கு மேலும் தொடருமா என்பது, போக போகத் தான் தெரியும்.