சேர்வலாறு அணையின் நீர்மட்டம் உயராதது ஏன்? விவசாயிகள் கேள்வி
கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த தொடர் மழையால் நெல்லை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. ஆனால் கடந்த 3 நாட்களாக மழை குறைந்ததால், அணைகளுக்கு வரும் நீரின் அளவும் குறைந்துள்ளது.
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (08-07-2017) விபரம் :
பாபநாசம்: உச்சநீர்மட்டம் : 143 அடிநீர் இருப்பு : 50.50 அடிநீர் வரத்து 138.06 கன அடிவெளியேற்றம் :254.75 கனஅடி
சேர்வலாறு :உச்ச நீர்மட்டம்: 156 அடிநீர் இருப்பு : 68.57 அடிநீர்வரத்து :719.6 கன அடிவெளியேற்றம்:இல்லை
மணிமுத்தாறு : உச்ச நீர்மட்டம்: 118 அடிநீர் இருப்பு : 34.19 அடி நீர் வரத்து : 7 கன அடிவெளியேற்றம்: ஏதுமில்லை
மற்ற அணைகளில் நீர்மட்டம் உயர்ந்தும், குறைந்தும் வரும் நிலையில் சேர்வலாறு அணையில் மட்டும் நீரின் அளவு கடந்த 3 நாட்களாக ஒரே அளவாக இருப்பது விவசாயிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. சேர்வலாறு அணைக்கு வினாடிக்கு 719 கன அடி வீதம் தண்ணீர் வரத்து இருந்தும் கூட நீர் மட்டம் கடந்த மூன்று நாட்களாக 68 அடிக்கு மேல் அதிகரிக்க மறுக்கிறது.. சுரங்க குழாய் மூலம் சேர்வலாறு அணை நீரை பாபநாசத்திற்கு திருப்பி விடுவதாக சொன்னாலும் கூட அங்கேயும் 49 – 50 அடியை தாண்டவில்லை. இதனால் மின்வாரியத்தினர் மீண்டும் தங்கள் ‘வேலையை’ துவக்கிவிட்டார்கள் போலும் என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.