பயங்கரவாதி புர்கான் வானி நினைவு தினம்; காஷ்மீரில் வரலாறு காணாத பாதுகாப்பு
காஷ்மீரில் பயங்கரவாதி புர்கான் வானி நினைவு தினத்தையொட்டி வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் அமர்நாத் யாத்திரையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 8ம் தேதி காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி புர்கான் வானி,22 பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் சுட்டு்க்கொல்லப்பட்டார். இதன் எதிரொலியாக மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் 90 பேர் கொல்லப்பட்டனர். 1300 பேர் காயமடைந்தனர்.
பக்கத்து நாடான பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் நவாஸ் ஷெ ரீப், புர்கான் வானி காஷ்மீர் விடுதலைக்காக உயிர் நீத்த தியாகி என்றொல்லாம் புகழும் அளவிற்கு சென்றது.
அமர்நாத் யாத்திரை நிறுத்தம்
காஷ்மீரில் கடந்த சில தினங்களுக்குமுன் அமர்நாத் எனப்படும் புனித யாத்திரை துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஜூலை 8-ம் தேதி) புர்கான் வானி நினைவு தினத்தை காஷமீரின் பல்வேறு பிரிவினைவாதிகள் அனுஷ்டிக்க திட்டமிட்டுள்ளனர். இதனால் பாதுகாப்பு கருதி அமர்நாத் யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளளதாக காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது.
பலத்த பாதுகாப்பு
அசம்பாவித சம்பவங்களை தடுக்க முன்னெச்சரிக்கையாக காஷ்மீர் மாநிலம் முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காஷ்மீரின் புல்வாமா,சோபியான், குல்ஹாம், ஆனந்தநாக் ஆகிய மாவட்டங்களில் சி.ஆர்.பி.எப்., இந்தோ திபெத் படையினர், எல்லை பாதுகாப்புபடையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.