ஜி.எஸ்டி ஒருங்கிணைந்த சந்தையை உருவாக்கி உள்ளது மோடி
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி முறை ஒருங்கிணைந்த சந்தையை உருவாக்கி உள்ளது என பிரதமர் மோடி கூறி உள்ளார்.
அரசுமுறை பயணமாக ஜெர்மனி சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கலந்து கொண்டார். மாநாட்டில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்த மோடி இந்தியா சார்பில் 11 நடவடிக்கைகள் அடங்கிய குறிப்பை வழங்கினார்.
ஓருங்கிணைந்த சந்தை
தொடர்ந்து பேசிய மோடி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜி.எஸ்.டி முறை 1.3 பில்லியன் மக்களிடையே ஒருங்கிணைந்த சந்தையை உருவாக்கி உள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக ஜி20 நாடுகள் குரல் கொடுக்க வேண்டும். என கூறினார்.
ஜெர்மனி கனடா தலைவர்களுடன் சந்திப்பு
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெர் மனியின் ஏஞ்சலா மெர்கல் மற்றும் கனடா நாட்டின் பிரதமர் ஐஸ்டின் டிரிடியூவை சந்தித்து பேசினார்.