
திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் நடுவில் 99 முட்டையிட்ட பெண் ஆமை – வியப்பில் பக்தர்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடற்கரையில் நேற்றிரவு 9 மணிக்கு 25 கிலோ எடை மதிக்கத்தக்க ஒரு பெண் ஆமை மக்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் நடுவே நடந்து சென்றுள்ளது. அதை அங்கிருந்த பொதுமக்கள் பின்தொடர்ந்து சென்றனர். சிறிது நேரம் கழித்து ஆமை ஒரு பள்ளம் தோண்டியுள்ளது. தோண்டிய பள்ளத்தில் 99 முட்டையிட்டது.
இதையடுத்து 1 மணி நேரத்திற்கு மேலாக ஆமை கடற்கரை பகுதியில் இருந்ததால் அங்கிருந்த பக்தர்களும், பொதுமக்களும் ஆமை முட்டையிடுவதை பார்த்து ஆச்சரியத்துடன் சென்றனர். பின்பு ஆமை இரவு 10 மணிக்கு மீண்டும் கடலுக்குள் சென்றது.
இந்த மூன்று மாதங்களில் முட்டை மாதம் அதாவது இனப்பெருக்கம் செய்யும் மாதம் இந்த கடற்கரை ஓரங்களில் உள்ள இடங்களில் வனத்துறையினர் இந்த மாதங்களில் தான் ஆமை இனம் இனப்பெருக்கம் செய்து முட்டையிடும் கடற்கரை காலம் என்பதால், இந்த மூன்று மாதங்களில் முட்டையிடும் பகுதிக்கு வந்து முட்டையிட்டு செல்வது வழக்கம்.
இந்த 99 முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து மணப்பாடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முட்டை மையத்தில் உள்ள முட்டைகளை மொத்தமாக சேகரித்து வைத்து 45 தினங்கள் கழித்து குஞ்சு பொரித்தவுடன் மீண்டும் கடலுக்குள் விடும் நிகழ்ச்சி நடைபெறும்.
வனத்துறை சரகர் கனிமொழி தலைமையில் வனத்துறையினர் மிகவும் பாதுகாப்பாக 99 முட்டைகளை சேகரித்து மையத்திற்கு கொண்டு சென்றனர்.
______________________________
செய்தி: திருச்செந்தூர் சதீஷ்