கருணாநிதிக்கு அ.தி.மு.க., ஆதரவு
சட்டசபை கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பங்கேற்பதில் இருந்து விலக்கு கோரி, தி.மு.க., கொண்டு வந்த தீர்மானம், அ.தி.மு.க., ஆதரவுடன் நிறைவேறியது.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர், ஜூன், 14ல் துவங்கியது. தி.மு.க., தலைவர் கருணாநிதி, உடல்நலக் குறைவால், கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை. சட்டசபைக்கு ஒரு நாள் கூட வரவில்லை. நேற்று, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், சட்டசபையில், ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அதில், ‘முன்னாள் முதல்வரும், எம்.எல்.ஏ.,வுமான கருணாநிதி, உடல்நலம் குன்றி உள்ளார். அவர் பூரண குணமடையும் வரை, ஓய்வெடுக்க வேண்டும் என, டாக்டர்கள் கூறியுள்ளனர். எனவே, சட்டசபை விதி, 20 / 1ன் கீழ், அவர் இந்த சட்டசபை கூட்டத்தொடரில், பங்கேற்காமல் இருக்க அனுமதி அளிக்க வேண்டும்’ என, குறிப்பிடப்பட்டிருந்தது. தீர்மானத்தை, எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் வழிமொழிந்தார். தீர்மானம், அ.தி.மு.க., ஆதரவுடன் நிறைவேறியது.