
பைக் மீது லாரி மோதி விபத்து – சம்பவ இடத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழப்பு
தூத்துக்குடி அருகேயுள்ள மாப்பிள்ளையூரணி மாதா நகர் 6வது தெருவைச் சேர்ந்தவர் சவரிமுத்து மகன் அண்டன் விக்டர் (28). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலைபார்த்து வருகிறார். நேற்று மாலை எட்டயபுரம் சென்றுவிட்டு பைக்கில் தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருந்தார். வெங்கடேசபுரம் அருகே வந்தபோது பின்னால் வந்த லாரி அவரது பைக் மீது மோதியது, இதில் பலத்த காயமடைந்த விக்டர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல்றிந்தத எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிந்து, லாரி டிரைவர் கயத்தார் தெற்கு சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த பாண்டி மகன் ஐயப்பன் (40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
CATEGORIES மாவட்டம்