
தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் உப்பள தொழிலாளர்கள் மற்றும் பாதயாத்திரை பக்தர்கள் பயன்பெறும் வகையில் ரூ22 லட்சம் மதிப்பீட்டில் புதிய கழிப்பறைகள்- கனிமொழி எம்பி திறந்து வைத்தார்
தூத்துக்குடி மாநகராட்சி 51 வயது வார்டுக்கு உட்பட்ட சத்யா நகர் மேம்பாலம் அருகே உப்பள தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பெரியசாமி நகர் குடியிருப்பு பகுதிகளில் சுமார் 625 பேர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக கழிப்பறை வசதிகள் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வந்த நிலையில், தூய்மை பாரத திட்டத்தின் மூலம் உப்பள தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் ரூ11லட்சம் மதிப்பீட்டில் ஒரு கழிப்பறையும்,
திருச்செந்தூர் செல்லும் மெயின் சாலையில் பாதசாரிகள் மற்றும் திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் வசதிக்காக தோப்புத் தெருவில் ஆண்களுக்கு 3 இருக்கையும், பெண்களுக்கு
3 இருக்கையும், மாற்றுத்திறனாளிகளுக்காக 1 கழிப்பறை இருக்கையுடன் ரூ.11 லட்சம் பாராளுமன்ற மதிப்பீட்டில் ஒரு கழிப்பறை பாரத பொது மக்கள் கனிமொழி 2.0/ 202-2023 திட்டத்தின் கீழ் உறுப்பினர்களாக உள்ளனர் . பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
நிகழ்வில், அமைச்சர் கீதாஜீவன்,
மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா, துணை ஆணையர் ராஜாராம், மாநகர பொறியாளர் பாஸ்கர், மண்டல தலைவர் பாலகுருசாமி, கவுன்சிலர்கள் வைதேகி, ராமகிருஷ்ணன், பச்சிராஜன், சுயம்பு, முப்பிடாதி, ராஜதுரை, முத்துவேல், தெற்கு உதவி ஆணையர் சொர்ணலதா, முத்துவேல் சுந்தரம், இளநிலை பொறியாளர் பிரபாகரன், சுகாதார அலுவலர் ராஜபாண்டி, கண்காணிப்பாளர் குருவையா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.